காலை உணவு பொங்கல் என்றால் ‘வேண்டாம்… தூக்கம் வரும்’ என்று ஒதுக்குவார்கள் பலர். ஆனால், அரிசிப் பொங்கலைச் சாப்பிடுவதால் ஏற்படும் மந்தத்தன்மை, இந்த வரகு அரிசிப் பொங்கலில் இருக்காது. இதில் சேர்க்கப்படும் நெய், திராட்சை, முந்திரி போன்றவற்றில் இருக்கும் நல்ல கொழுப்பு உடனடி எனர்ஜியைத் தரும்.
என்ன தேவை?
வரகரிசி, டைமண்ட் கற்கண்டு – தலா ஒரு கப்
பால் – இரண்டரை கப்
முந்திரிப் பருப்பு – 6 (வறுத்தது)
ஏலக்காய் – 4
நெய், உலர் திராட்சை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் வரகரிசியை சிவக்க வறுத்து, சூடான பால்விட்டு கிளறி குக்கரில் வேகவிடவும். நான்கு விசில் வந்ததும் இறக்கி, மசிக்கவும். வாணலியில் கற்கண்டுடன் சிறிது நீர் சேர்த்துப் பாகு காய்ச்சி, வரகரிசி சாதத்தைப் போட்டுக் கிளறவும். வாணலியில் சிறிது நெய்விட்டு ஏலக்காய், திராட்சையைத் தாளித்துச் சேர்த்து, வறுத்த முந்திரி தூவிப் பரிமாறவும்.
வீட்டிலேயே க்ரில் உணவுகள்… கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!