சென்னை – கோவை வந்தே பாரத்: எங்கெங்கு நிற்கும்?

தமிழகம்

இந்தியாவில் விரைவில் இயக்கப்பட உள்ள 12-ஆவது சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும் என்கிற எதிர்பார்ப்பு ரயில் பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது. 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-இல் அறிமுகம் செய்தது.

இந்த ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் எனப் பல நவீன வசதிகள் உள்ளன.

சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்த வகையான ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டன. இந்தியா முழுவதும் தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதன் முதல் சேவை டெல்லி – வாரணாசி வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. ஐந்தாவது சேவை சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்தில் தொடங்கப்பட்டது.

டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலுக்கு முன்பாக தொடங்கப்பட்டால், அது இந்தியாவின் 11ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும்.

இந்த நிலையில் சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 8 அன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த ரயில் சென்னை – கோவைக்கு இடையில் காட்பாடி, சேலம், திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையிலிருந்து கோவை செல்ல பயண நேரம் 6 முதல் 6.30 மணி நேரம் ஆகும்.

ரயிலின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி.மீட்டர் வரை இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ்

பியூஷ் கோயல் சந்திப்பை  தவிர்த்த அண்ணாமலை?  மீண்டும் தகிக்கும் தமிழக பாஜக

கிச்சன் கீர்த்தனா: பனீர் பாயசம்

+1
13
+1
12
+1
16
+1
41
+1
18
+1
24
+1
19

6 thoughts on “சென்னை – கோவை வந்தே பாரத்: எங்கெங்கு நிற்கும்?

  1. Tamilnadu is always deprived of Railway facilities compared to other Northern States. So many areas have to be converted to Broadgauge/Doubling of tracks/Electrification of tracks etc. Without allocation of funds in the Budget how can those ambitions be fulfilled?

    1. We should cooperate with union Govt. so as to benefit more by state Govt. However the avoiding of political confronts between state ruling party and central ruling party it has always been suggested to have centrally controlled agencies are moving free from any non cooperation from state level.

    2. Please don’t succumb to the political brainwashing of some kind of stepmotherly treatment for Tamil Nadu. Every state has its own greviences. We have a fair system even if it’s not perfect.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *