சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று (மே 2) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பூங்காவைச் சுற்றிப் பார்க்க வருகின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா , கிண்டி சிறுவர் பூங்கா இன்று (மே 2 – செவ்வாய்க்கிழமை) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக செவ்வாய்க்கிழமை வார விடுமுறை என்ற நிலையில், கோடை விடுமுறையையொட்டி பார்வையாளர்களுக்காக இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: பலாக்காய் சிப்ஸ்
குடிப்பழக்கம்: 300 போலீசாரை வீட்டுக்கு அனுப்பிய அஸ்ஸாம் முதல்வர்!