புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, குதிரை உள்ளிட்ட பலவகையான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காகப் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வார விடுமுறை விடப்படுவது வழக்கம்.
தற்போது விடுமுறைக்காலம் என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்துவருகின்றனர். இந்த நிலையில் வருகிற செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) புத்தாண்டுக்கு முந்தைய நாள் என்பதாலும், மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் வருகைக்காகத் திறந்திருக்கும்” என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: குளிர்கால ஸ்பெஷல்… இதையெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!
POSH குழுவில் மாணவி புகார் அளித்தாரா?: அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!
எப்.ஐ.ஆரை போலீஸ் வெளியிடவில்லை : தமிழக அரசு தகவல்!
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே… அப்டேட் குமாரு
எப்.ஐ.ஆர் லீக் ஆனது எப்படி?: சென்னை கமிஷனர் அருண் பேட்டி!
சூடுபிடிக்கும் புரோ கபடி போட்டி… இன்று நாக்அவுட் ஆட்டங்கள்!
விபத்துக்குள்ளான விமானத்தில் விழுந்த ஓட்டை… உக்ரைன் ட்ரோன் காரணமா?