வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை நாளிலும் திறந்திருக்கும்!

Published On:

| By Selvam

செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் மாட்டு பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா ஜனவரி 16-ஆம் தேதி திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வழக்கமாக பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படும். ஆனால், தற்போது ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாட்டு பொங்கலையொட்டி மக்கள் வருகை இருக்கும் என்பதால் அன்றைய தினம் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வர வேண்டாம் என்று பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் ரூ.115-லிருந்து ரூ.200 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: வேக்ஸிங் செய்ய போறிங்களா… இந்த விஷயங்களை மறக்காதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment