வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன என்பது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 3) உத்தரவிட்டுள்ளது.
கடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தை வடிவமைக்க, சர்வதேச அளவில் கோரப்பட்ட ஒப்பந்தத்தில் பங்கேற்ற, ஏழு நிறுவனங்களில் தகுதியான ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு ரூ.100 கோடியில் இந்த மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வடலூர் சத்திய ஞானசபைக்கு சொந்தமான நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடைக்கோரி பாஜக நிர்வாகி வினோத் ராகவேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (ஏப்ரல் 3) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில், “சர்வதேச மையம் அமைத்தாலும் அந்த நிலம் ராமலிங்க அடிகளார் அறக்கட்டளை வசமே இருக்கும்.
அடிப்படை வசதிகள் இல்லை என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வந்ததால் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படுகிறது” என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்ட உள்ளன? என்பது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024: முக்கிய போட்டிகளை ‘மிஸ்’ செய்யும் பவுலர்… சென்னை அணி மீளுமா?
அண்ணாமலை சொன்னது உண்மையா? கோடிகளைக் கொட்டும் பாஜகவின் ‘ABC ’ பிளான்!