காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தைக் கொண்டாடுவதில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால், ரோஜா பூக்களைப் பரிசளிப்பது தான்.

பலரும் ரோஜா பூக்களை தங்கள் மனதிற்குப் பிடித்தவர்களுக்குப் பரிசாகக் கொடுத்து அன்பை வெளிப்படுத்திக் கொள்வார்கள். இதனால் காதலர் தினமான இன்று ரோஜா பூக்களுக்கு மதிப்பு அதிகம்.
இந்நிலையில், ஓசூர், ஊட்டி, பெங்களுரு, கொடைக்கானல் போன்ற இடங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள பூ மார்கெட்டுகளுக்கு பூக்கள் வந்து குவிந்துள்ளன. இந்த ஆண்டு ரோஜா பூக்களின் விலை 2 மடங்கு, 3 மடங்காக உயர்ந்துள்ளது.
ரூ. 150-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ரோஜா பூ கட்டு இன்று ரூ.500 வரை விலை உயர்ந்துள்ளது. ரூ. 350-க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ கட்டு காதலர் தினத்தை முன்னிட்டு ரூ. 800 வரை விலை உயர்ந்துள்ளது.
சிவப்பு நிற ரோஜா மலர்கள் மட்டுமல்லாது அனைத்து வகையான ரோஜா பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு ரோஜா பூ 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடும் பனியால் வரத்து குறைந்துள்ளதாலும் ரோஜா பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விலை உயர்ந்தாலும் பூக்களின் விற்பனை அமோகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
முசிறி சம்பவம்: மின்னம்பலம் செய்தி எதிரொலி – ஆக்ஷனைத் தொடங்கிய போலீஸ்