நாளை(பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரோஜாவின் விலை நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
காதலர்கள் அன்புடன் பரிசுப் பொருட்களையும் பரிமாறிக் கொள்வது வழக்கம். அதில் முதல் இடம் பிடிப்பது ரோஜா மலர்தான்.
நாளை காதலர் தினம் கொண்டாப்படுவதையொட்டி அனைத்து வகையான வண்ண ரோஜா பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பகுதிகளுக்கு ஓசூர்,பெங்களூரில் இருந்தே ரோஜாப்பூக்கள் வருவது வழக்கம்.
ஆனால் அந்தப் பகுதிகளில் நிலவி வரும் கடும் பனி பொழிவு காரணமாக ஸ்டெம்பு ரோஜா பூக்கள் வரத்து குறைந்துள்ளது.
குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் தினந்தோறும் சுமார் 750 கட்டு ஸ்டெம்பு ரோஜா பூக்கள் வரும் நிலையில் இன்று 250 ஸ்டெம்பு ரோஜா கட்டுகளே வந்துள்ளது.
இதனால் இன்று இரண்டாவது நாளாக ஸ்டெம்பு ரோஜா பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு 20 எண்ணிக்கை கொண்ட பல வண்ண ஸ்டெம்பு ரோஜா பூக்கள் கட்டு ஒன்று 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று நான்கு மடங்கு விலை அதிகரித்து 550 ரூபாயாக விற்கப்படுகிறது.
ஒரு ஸ்டெம்பு ரோஜா பூ 10 ரூபாயில் இருந்து விலை அதிகரித்து 30 முதல் 35 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.குறிப்பாக தாஜ்மஹால் ரோஜாவான சிகப்பு ஸ்டெம்பு ரோஜா அதிக அளவு விரும்பி வாங்கப்படுகிறது.
கலை.ரா
நயன்தாரா மீதான விமர்சனம் பற்றி மாளவிகா மோகனன் கொடுத்த பதில்!
கார் மீது பேருந்து மோதி விபத்து!