ஆன்மிக முடிச்சுகளை அறுத்த பங்காரு அடிகளார்: வைரமுத்து இரங்கல்!

Published On:

| By christopher

vairamuthu condolence to bangaru adigalar death

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் நிறுவனர் பங்காரு அடிகளார் (வயது 82) மாரடைப்பு காரணமாக நேற்று (அக்டோபர் 19) உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளாரின் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,  ஆன்மீக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பக்தர்களும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்துவும் மறைந்த பங்காரு அடிகளாருக்கு இரங்கல் கவிதை எழுதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,

“சமய பீடத்தைச்

சமுதாய பீடமாய் மாற்றியவர்

அடித்தட்டு மக்களுக்கு

அடைத்துக் கிடந்த

ஆன்மிகக் கதவுகளை

எளியவர்க்கும் மகளிருக்கும்

திறந்துவிட்டவர்

இறுகிக் கிடந்த

ஆன்மிக முடிச்சுகளைத்

தளர்த்தியவர் மற்றும் அறுத்தவர்

சமயப் பொதுவுடைமையாளர்

பங்காரு அடிகளார் மறைவால்

துயரமுறும்

அத்துணை இதயங்களுக்கும்

ஆழ்ந்த இரங்கல்

பீடம் கண்டவரின்

பீடு புகழ் நீடு நிலவட்டும்” என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

லியோ – விமர்சனம்!

45 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel