வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட மக்களுக்கு இன்று (அக்டோபர் 17) வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக்கொள்ளளவை எட்டியது.
இந்த நிலையில் வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால், வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதன் காரணமாக 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2209 கனஅடியாக இருப்பதால் 3வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, கடக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வைகை ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஜெ.பிரகாஷ்
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை: சட்டப்பேரவையில் இன்று முடிவு!
தீவு போல் காட்சியளிக்கும் அந்தியூர்: பள்ளிகளுக்கு விடுமுறை!