வாச்சாத்தி வன்கொடுமை மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!

Published On:

| By Selvam

vachathi case madras high court

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் கடந்த 2011-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கூறி 1992-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் சோதனை நடத்தினர், இந்த சோதனையின் போது கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆண்களை கடுமையாக தாக்கி பொருட்களை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

vachathi case madras high court

இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. சிபிஐ விசாரணையில் 4 ஐ.எப்.எஸ் அதிகாரிகள், 124 வனத்துறை அதிகாரிகள், 5 வருவாய்த்துறை என 215 பேர் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட  17 வனத்துறை அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,.

5  பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

vachathi case madras high court

இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்து வந்தார்.

கடந்த மார்ச் 4-ஆம் தேதி வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நேரில் சென்று அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்தினார். வாச்சாத்தி வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஜாப்ரா எலைட் இயர்போன்: சிறப்பம்சங்கள் என்ன?

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்!

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share