தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் 1992-ஆம் ஆண்டு பதிவான பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் இன்று (மார்ச் 4) அக்கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டதாக வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அந்த கிராமத்தில் இருந்த இளம் பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை தமிழக காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
19 ஆண்டு காலம் நடந்து வந்த இந்த வழக்கில் 2011-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட செசன்ஸ் நீதிபதி குமரகுரு, வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் என 215 பேருக்கு ஓராண்டு முதல் பத்தாண்டுகள் வரை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி 24 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட 54 பேர் உயிரிழந்து விட்டனர்.
தண்டனை பெற்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த வேல்முருகன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இந்தநிலையில், இன்று வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீதிபதி வேல்முருகன் விசாரணை நடத்தினார்.
செல்வம்
அதிரடியாய் உயர்ந்த தங்கம் விலை!
புலம்பெயர் தொழிலாளர்கள்… போலி வீடியோக்கள்: உண்மை ரிப்போர்ட்!