யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு: ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

Published On:

| By Kalai

tnpsc upsc

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் கலந்து கொள்ளும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளவிலேயே முன் அனுமதி வழங்கிட பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(UPSC), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மற்றும்,

இதர தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள பள்ளிக்கல்வித்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.

அவ்வாறு முன் அனுமதி கோரும்போது, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளிக் கல்வி ஆணையரகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு, ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் பலரும் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும்,

இதர தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள உரிய கால அவகாசத்திற்குள் அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே உரிய முன் அனுமதி வழங்கிடலாம் எனத் தெரிவித்துள்ளார்.

கலை.ரா

எலான் மஸ்க்கிற்கு கோரிக்கை வைத்த அமெரிக்கா

அதிமுகவில் இணைந்தார் மருத்துவர் சரவணன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share