இப்போ சேலத்துல இருக்குதாம்! ஃபெஞ்சல்… கோவை வழியா எங்கே போகுது தெரியுமா?

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், நேற்று 3 மணி நேரமாக (அதிகாலை 3-6 மணி வரை) நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது. பின்னர், மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதனால்,விழுப்புரம், புதுச்சேரி நகரங்களில் கனமழை கொட்டியது. விழுப்புரம் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

புதுச்சேரியில் மீட்புப் பணிக்கு ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அங்கு, வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வலுவிழந்த ஃபெஞ்சல் புயல் தற்போது சேலத்தில் நிலை கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து கோவை வெதர்மேன் சந்தோஷ் கிரிஷ் கூறுகையில், ‘ சேலத்திலுள்ள பெஞ்சல் புயல் மேற்கு, தென்மேற்காக நகர்ந்து ஈரோடு, கோவை நகரின் வடபகுதி நீலகிரி வழியாக நாளை அரபிக்கடலை சென்றடையும். இதனால், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய கூடும்.

திருப்பூர், திண்டுக்கல், கரூர் பகுதியில் லேசான மழை பெய்யலாம். கோவையில் குளுமையான சூழல் நிலவும். நீலகிரியில் பல பகுதிகளில் கனமழை பெய்யலாம். எனவே, இன்று நாளையும் நீலகிரிக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. நீலகிரியை தவிர மற்ற பகுதிகளில் வெள்ளத்துக்கு வாய்ப்பு இல்லை ‘என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

திருவண்ணாமலை மலைச்சரிவு… மீட்பு பணியில் ஐஐடி குழு – களத்தில் அமைச்சர் வேலு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விலங்குகள் போல பெண்களை… விஜய் சேதுபதி மீது ஜேம்ஸ் வசந்தன் பாய்ச்சல்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts