தமிழகத்தில் நிலவி வந்த குளிர் தற்போது படிப்படியாகக் குறைந்து கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதிலேயே வெப்பநிலை காலை நேரங்களிலேயே சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (மார்ச் 1) முதல் வெயில் தாக்கத்தினால் ஏற்படும் நோய்களைக் கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.
மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண் மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில்,
மார்ச் 1ஆம் தொடங்கி அன்றாடம் வெயில் சம்பந்தமான நோய்களைக் கண்காணிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மாநில அரசுகள் சுகாதாரத் துறை மற்றும் சுகாதார ஊழியர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக், தேவையான மருந்து கருவிகளை வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2021ஆம் ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக, 121 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான ஆண்டாக இருந்துள்ளது.
இதற்கு முன்னதாக 2009, 2010, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகள் இந்தியாவில் அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளாக இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
நீண்ட ஆயுள்…நிறைந்த செல்வம்…முதலமைச்சரை வாழ்த்திய இளையராஜா
நாகாலாந்து EXIT POLL : வெற்றி வாய்ப்பு யாருக்கு?