unapproved plots regularisation

அனுமதியற்ற மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற அவகாசம் : முத்துசாமி புதிய அறிவிப்பு!

தமிழகம்

2016-ஆம் ஆண்டுக்கு முன்பாக கட்டப்பட்ட மனைப்பிரிவு அங்கீகாரம் பெறாமல் இருந்தால் வரன்முறைப்படுத்த ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி,

“கட்டுமான பொறியாளர்கள், கட்டுமான நிறுவன உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் 44 கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அதில் 18 கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டோம்.

மதுரை, திருவண்ணாமலை கோவில் அதிகம் உள்ள இடங்களில் தொடர் கட்டுமானம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையானது கடந்த 10 ஆண்டுகளாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக மாநகராட்சி, பஞ்சாயத்து அமைப்புகள் தொடர் கட்டுமான அனுமதியை கொடுப்பதற்கு வாய்ப்பு இருந்தது. 2019-ஆம் ஆண்டு புதிய விதி உருவாக்கப்பட்டது.

அதன் காரணமாக தொடர் கட்டுமானம் கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. தொடர் கட்டுமானம் எந்தெந்த பகுதிகளில் தேவை என்பதை ஆராய்ந்து வருகிறோம்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர் கட்டுமானம் நாகர்கோவிலில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார். நாகர்கோவில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல நகரங்களில் தொடர் கட்டுமானம் வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

இதனை முழுமையாக ஆய்வு செய்யாமல் அனுமதி கொடுக்க முடியாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் மாஸ்டர் பிளான் 7 சதவிகிதம் தான் கவர் ஆகியிருந்தது. திமுக ஆட்சிக்காலத்தில் 19 சதவிகிதமாக கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 135 மாஸ்டர் பிளான் கொண்டு வர இருக்கிறோம்.

2016-ஆம் ஆண்டுக்கு முன்பாக மனைப்பிரிவு அங்கீகாரம் பெறாமல் இருந்தால் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்படி அங்கீகாரம் பெற வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

கால அவகாசம் முடிந்தும் வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்காதவர்கள் உள்ளனர். 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் தனி மனைகளை வரன்முறைப்படுத்த 6 மாத கால அவகாசம் கொடுத்துள்ளோம்.

சாலை அளவுகளை பொறுத்து தான் வீடுகள் எத்தனை மாடி கட்டலாம் என்ற அளவுகோல் உள்ளது. எந்த கட்டிடத்தையும் அனுமதியில்லாமல் கட்டாதீர்கள். விதிமீறல் இருந்தால் வீடு சீல் வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

தமிழகத்தில் இன்று முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல்!

‘விஜய் 68’ படத்தில் ‘மங்காத்தா’ இடம்பெறுமா?

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *