யுஜிசி நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (பிப்ரவரி 18) வெளியானது.
உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியராக பணிபுரிவதற்கு பல்கலைக்கழக மானிய குழு நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
நெட் தேர்வானது ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான யுஜிசி நெட் தேர்வானது பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை நடைபெற உள்ளது.
தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை https://ugcnet.nta.nic.in/ அல்லது https://examinationservices.nic.in/ என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஹால் டிக்கெட்டில் தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் தேர்வு எழுதும் இடம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
செல்வம்