பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்கு திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் செல்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா, ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி, அவரது நினைவிடத்தில் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு மரியாதை செலுத்துவர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (அக்டோபர் 30) பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டிருந்தார்.
இதற்காக இன்று (அக்டோபர் 29) விமானம் மூலம் மதுரை செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட முதுகு வலியால் அவரை நீண்ட தூரம் பயணிக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர் ஓய்வில் உள்ளார்.
இதையடுத்து, அவருக்குப் பதில் மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பசும்பொன் சென்று மரியாதை செலுத்த இருக்கின்றனர்.
இந்த நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நாளை பசும்பொன் செல்ல இருக்கிறார். உதயநிதி வருகையை ஒட்டி, அப்பகுதி திமுகவினர், அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க இருக்கின்றனர்.
ஜெ.பிரகாஷ்
கோவை பந்த் : பாஜக புதிய முடிவு!
பத்திரிகையாளர் கேட்ட கேள்வி: ஆத்திரமடைந்த காயத்ரி ரகுராம்