கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (நவம்பர் 27) அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். #HBDUdhayanidhiStalin என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் தலைவரும், ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

திமுக துணைப்பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில்,

“கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் மகனும், தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

அவரது மக்கள் பணியும் கலைப் பணியும் சிறந்திட வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கிக்கு தேவையான உபகரணங்களை வழங்குகிறார்.

பின்னர் அன்பகத்தில் தொண்டர்களை சந்திக்கும் உதயநிதி, மாலை 4.30 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதையை திறந்து வைக்கிறார்.

செல்வம்

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் இலவசம் தான்..ஆனால் ஜியோ வைத்த செக்!

பொற்சபை புகுந்தாரே அவ்வை நடராசனார்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0