வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகளும், குடிநீர் குழாயில் வந்த மனிதக் கழிவுகளும் வெவ்வேறானவை என டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இதில் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. கடந்த நான்கு மாதங்களாக இதுவரை 147 நபர்களிடம் விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர் சிபிசிஐடி போலீசார். எனினும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் அளித்த மனுவின்படி, சந்தேகத்திற்கு உரிய 11 பேர் இடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டப்பட்டது.
இதற்கிடையே வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என பகுப்பாய்வு பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகளும், குடிநீர் குழாயில் வந்த மனிதக் கழிவுகளும் வேறு வேறானவை என டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கண்டறியப்பட்ட இரு டி.என்.ஏ வடிவங்களையும் சந்தேகத்திற்குரிய 11 பேரின் டி.என்.ஏ-க்களுடன் ஒப்பிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
12 மணி நேர வேலை: மசோதா நிறைவேற்றம், திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு!
மணீஷ் காஷ்யப் கைது: தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
இது போன்ற ஆய்வுகள் நமக்குப் புதிது; ஆனால் சரியான வழி…