unidentified deadbodies in thirupparankunram

ரயில் பாதை அருகே இளைஞர்களின் உடல்: போலீசார் விசாரணை!

தமிழகம்

ரயில்வே சுரங்கப்பாதை அருகே முகம் சிதைந்த நிலையில் கிடந்த இளைஞர்களின் உடல்களை போலீசார் பிரதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ரயில்வே சுரங்கப்பாதை அருகே இரண்டு இளைஞர்களின் உடல்கள் கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு இன்று (ஜூலை 20) தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திருப்பரங்குன்றம் போலீசார் ரயில்வே போலீஸுக்கு தகவல் தெரிவித்து விட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

unidentified deadbodies in thirupparankunram

ரயில்வே பாதை அருகே முகம் சிதைந்த நிலையில் இருந்த சடலங்களை பார்வையிட்ட காவல் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். ஒரு சடலத்தின் கையில் மகேஷ் என பச்சைகுத்தி இருப்பதை மட்டுமே காவலர்கள் கண்டுபிடிக்க முடிந்தது. மற்றொரு சடலத்தின் அடையாளம் காண இயலவில்லை.

தொடர்ந்து அவர்களது சட்டைப்பையில் சோதனை நடத்திய போது, தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் வழியாக மதுரை நோக்கி வந்த ரயிலில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவரது உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோனிஷா 

டெண்டர் முறைகேடு வழக்கு: இபிஎஸ் கேவியட் மனு!

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். விடுவிப்பு!

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
2