கனமழை காரணமாக நெல்லையில் வீடு இடிந்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகத் திருநெல்வேலி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை, உடையார்பட்டி, சிந்துபூந்துறை என திரும்பும் பக்கமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. இந்த மழையால் தற்போது வரை நெல்லையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
நெல்லை பாளையங்கோட்டை அருகே குலவணிகபுரம் பகுதியில் குடும்பத்தினருடன் மண் வீட்டில் வசித்து வந்தவர் சிவக்குமார். கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த மழை மற்றும் அந்த பகுதியில் சூழ்ந்த வெள்ளத்தால் சிவக்குமாரின் வீடு இடிந்து விழுந்தது.
இந்த இடிபாடுகளில் சிக்கி சிவக்குமார் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளுக்கு நடுவே கிடக்கும், சிவக்குமாரின் உடலைப் பார்த்து குடும்பத்தினர், “எவ்வளவோ சொன்னனேயா வெளியே வர சொல்லி” என கதறி அழும் காட்சி காண்போரைக் கண் கலங்கச் செய்கிறது.
இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதுபோன்று மேலப்பாளையம் நடராஜபுரம் பகுதியில் பட்டத்தி என்ற 75 வயது மூதாட்டி வீடு இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பழைய கட்டிடங்கள், மண் வீடுகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“போர், ரத்தம், விரோதம்” : சலார் புதிய ட்ரெய்லர்!
“அவசியமின்றி வெளியே வராதீங்க”: தென் மாவட்ட மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்!
வரலாற்றில் முதல்முறை: ஒரே நாளில் ஆ.ராசா உட்பட 78 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!