சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா!

தமிழகம்

சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், சேய் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், சேய் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மதுரை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சீனாவில் இருந்து வந்த தாய் மற்றும் குழந்தை என இருவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் இவர்களுடன் விமானத்தில் வந்த 67 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

-ராஜ்

டிஜிட்டல் திண்ணை: ‘விலை போகாதவங்க, வெறி பிடிச்சவங்க வேணும்’- மாசெக்கள் கூட்டத்தில் எடப்பாடி பேசியது இதுதான்!

மதுபான கொள்முதல்: டாஸ்மாக்கிற்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0