கல்வி விருது விழா நடைபெறும் அரங்கத்திற்குள் இன்று (ஜூலை 3) நுழைந்ததும் பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கை மாணவி நிவேதா அருகில் அமர்ந்து அவருக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருது, கல்வி ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்து வருகிறார்.
ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல்கட்டமாக சென்னை, திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 127 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விருது, ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த 107 தொகுதிகளைச் சேர்ந்த 642 மாணவ, மாணவிகளுக்கு விருது மற்றும் கல்வி ஊக்கத்தொகையை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வழங்க உள்ளார்.
அதன்படி இன்று விழா தொடங்கியதும் மாணவர்கள் ஆர்ப்பரிக்க அரங்கத்திற்குள் நுழைந்த விஜய், நேராக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற திருநங்கை மாணவி நிவேதாவின் அருகில் சென்று அமர்ந்தார். தொடர்ந்து அவரிடம் சிறிது நேரம் பேசி வாழ்த்து தெரிவித்த பின் விஜய் மேடைக்கு சென்றார்.
கடந்த வாரம் நடைபெற்ற விருது விழாவில் சாதிய கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அருகில் அமர்ந்த விஜய், இந்த முறை திருநங்கை மாணவி அருகில் அமர்ந்து பேசியது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Share Market : ஹிண்டன்பர்க் அறிக்கையால் அடிவாங்கிய அதானி குழும பங்குகள்!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!