தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா: ரயில் முன்பதிவு தொடக்கம்!

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு  தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதிய நிலையில் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி- தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் முன்பதிவு இன்று (ஜூலை 9) காலை 8 மணிக்கு தொடங்கியது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் இந்த ஆண்டு தங்கத்தேர் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா இம்மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தங்கத்தேர் பவனி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தூத்துக்குடி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக பக்தர்கள் வசதிக்காக சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதினார். மாவட்ட பயணிகள் நலச்சங்கம் சார்பிலும் தனியாக கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று சென்னை- தூத்துக்குடி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி- தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் முன்பதிவு இன்று (ஜூலை 9) காலை 8 மணிக்கு தொடங்கியது.

தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு ரயில் புறப்படுகிறது. அதேபோல், தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலானது கூடுதலாக அரியலூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராஜ்

1,000 ரூபாய்… 13 கேள்விகள்: விழிபிதுங்க வைக்கும் விண்ணப்பம்!

ஆளுநருடன் அமித் ஷா சந்திப்பு: ’பர்போஸ்’ சஸ்பென்ஸ்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts