தமிழக சட்டம் ஒழுங்கு: டிடிவி சரமாரி கேள்வி!

தமிழகம்

தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் காவல்துறையின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (பிப்ரவரி 13) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைநகர் சென்னையில் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து நான்கு ATMகளில் நடந்த கொள்ளை, திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை.

ttv dhinakaran questions tamilnadu law and order

கோவையில் பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை போன்ற செய்திகள் தமிழ்நாடு காவல்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்குகின்றன.

கொள்ளை சம்பவங்களில் வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினரே தெரிவித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன. மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தி.மு.க. அரசு என்ன செய்யப்போகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

செல்வம்

தமிழக அரசு – ரெனால்ட் நிசான்: ரூ.3,300 கோடி ஒப்பந்தம்!

அதானி விவகாரம்: மாநிலங்களவையில் கடும் அமளி!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *