யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமத்தை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் இன்று (அக்டோபர் 7) ரத்து செய்துள்ளார்.
செப்டம்பர் 17-ஆம் தேதி பைக் ரேஸரும் யூடியூபருமான டிடிஎஃப் வாசன் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் சாகசம் செய்ய முயன்ற நிலையில் விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது. அவர் மீது IPC 276, 336, 308,184,188 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிஎஃப் வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு அக்டோபர் 5-ஆம் தேதி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, விளம்பரத்திற்காகவும் இளைஞர்களை தவறான வழியில் செயல்பட வாசன் தூண்டுவதால் அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என்றும் ஜாமீன் வேண்டுமென்றால் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை முடக்கிவிட்டு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதால் டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமத்தை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் 6.10.2023 முதல் 5.10.2033 வரை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்துள்ளார். இதனால் டிடிஎஃப் வாசன் 2033-ஆம் ஆண்டு வரை வாகனங்களை இயக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கோதுமை தோசை
இன்பமாய் இருக்குதய்யா