வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை (நவம்பர் 10) ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசனம் மூலம் 10 நாட்களில் 4.25 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் பிரவேசத்துக்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் நாளை (நவம்பர் 10) ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு 22,500 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 2 லட்சத்து 25,000 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலவச தரிசனம் மூலம் நாளொன்றுக்கு 42,500 பேர் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களில் 4 லட்சத்து 25,000 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தீபாவளி பரிசாக ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள்: அரசு மருத்துவர்கள்!
சித்தேரியை தனியாருக்கு எப்படி பட்டா போட்டு தர முடியும்? அன்புமணி ராமதாஸ்