திருப்பதி: இனி மாதந்தோறும் 24ஆம் தேதி ரூ.300 தரிசனத்துக்கு முன்பதிவு!

தமிழகம்

திருப்பதி கோயிலில் இனி ஒவ்வொரு மாதமும் 24ஆம் தேதி அன்று அடுத்த மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டை ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெவ்வேறு தேதிகளில் வெளியிடப்படுகிறது. முன்கூட்டியே இதுகுறித்து அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலையும் உள்ளது.

இதனால் பக்தர்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது. ஆனாலும் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் முன்பதிவு செய்து விடுகின்றனர். இந்த நிலையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் ஆர்ஜித சேவை மற்றும் ரூ.300 கட்டண டிக்கெட்டுகளை வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இனி, ஒவ்வொரு மாதமும் 18 முதல் 20ஆம் தேதிக்குள் சுப்ரபாதம் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

பொது ஆர்ஜித சேவைக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் 21ஆம் தேதி வெளியிடப்படும்.

மாதந்தோறும் 24ஆம் தேதி ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தினமும் 70,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

15,000 முதல் 20,000 பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு இலவச தரிசனம் டிக்கெட் வழங்கப்படுகிறது. நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு 1240-வது படிக்கட்டில் சாமி தரிசனம் செய்ய இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலை தொடர்கிறது.

மஸ்தான், செந்தில் பாலாஜி – அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் : அண்ணாமலை காட்டம்!

வள்ளல் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம்: புதிய திராவிட கழகம் கோரிக்கை!

அணிலின் தாகம் தீர்த்த இளைஞர்: வைரல் வீடியோ!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “திருப்பதி: இனி மாதந்தோறும் 24ஆம் தேதி ரூ.300 தரிசனத்துக்கு முன்பதிவு!

  1. ஒரே நாள்ல அத்தனை பேரும் தரிசனத்திற்கு பதிவு செய்யப் போகும்போது பலருக்கும் கிடைக்காத நிலைதான் உள்ளது. மேலும் ஏஜெண்ட்டுகளின் பலம் வாய்ந்த சாப்ட் வேர் மூலம் குறுக்கீடு எனவும் சொல்கிறார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *