திருப்பதி: மே மாத தரிசன ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு!

தமிழகம்

கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (ஏப்ரல் 25) காலை 10 மணிக்கு https://tirupatibalaji.ap.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

திருப்பதி – திருமலை அதிகாரபூர்வ தேவஸ்தான இணையதளம் போலவே  41 போலி இணையதளங்கள் செயல்பட்டது தெரியவந்து புகார் அளித்துள்ள நிலையில்,

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஏழுமலையான் கோயில் ஆர்ஜித சேவைகள்,

தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகளை முன்பதிவு செய்யுமாறும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ மொபைல் ஆப்பையும் பயன்படுத்தலாம் என்றும் போலி இணையதளங்களை நம்ப வேண்டாம் என்றும் பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் திருமலையில் பக்தர்கள் மே மாதம் தங்குவதற்கான அறைகள் முன்பதிவு நாளை (ஏப்ரல் 26) காலை 10 மணிக்கும்,

திருப்பதியில் உள்ள அறைகள் ஏப்ரல் 27ஆம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்பட உள்ளது.

பக்தர்கள் தங்களுக்கு தேவையான நாளுக்கான டிக்கெட்கள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று  திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ராஜ்

“எம்ஜிஆருக்கு உதவியதை போல ஓபிஎஸ்க்கும் உதவுவேன்”: பண்ருட்டி ராமச்சந்திரன்

“கட்சி நிதியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்”: ஓபிஎஸ்

கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் வற்றல்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0