TTD Free Tickets for Vaikunta Ekadasi 2023

திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு இலவச டிக்கெட்!

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 23-ஆம் தேதி முதல்  ஜனவரி 1-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ள நிலையில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு ரூ.4.23 லட்சம் இலவச டிக்கெட்டுகளை 9 இடங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். TTD Free Tickets for Vaikunta Ekadasi 2023

இதுகுறித்து பேசியுள்ள திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி,

“வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் சிரமம் இன்றி விரைவாக தரிசனம் செய்வதற்காக ரூ.2.25 லட்சம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

சாதாரண பக்தர்களும் வைகுண்ட வாசல் வழியாக சாமியை தரிசிக்க டிசம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு 4 லட்சத்து 23,500 இலவச தரிசன டிக்கெட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மையங்களில் வழங்கப்பட உள்ளது.

காலை 6 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நித்திய அன்னதானம்  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 7 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளது.

பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீஸார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீஸார்,  தன்னார்வலர்களைப் பணியில் ஈடுபடுத்த உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக திருமலையில் கூட்டம் அதிகமாக உள்ளதால் இலவச தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டுகள் தரிசனத்துக்கு 3 மணி நேரமாகிறது.

மேலும் ஆன்லைன் டிக்கெட்டுகள் 1 மணி நேரத்துக்குள் தீர்ந்து விடுகிற நிலையில் இதில் முறைகேடுகள் நடப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். TTD Free Tickets for Vaikunta Ekadasi 2023

பக்தர்களுக்கு எளிதில் ஆன்லைன் டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மங்களூர் மொச்சை கிரேவி

குடிநீர் தொட்டியில் மலம்..? ‘காக்கா தான் காரணம்’ : ஆட்சியர் விளக்கம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts