திருப்பதி தேவஸ்தானம்: போலி டிக்கெட்டுகள் விற்பனை!

இந்தியா தமிழகம்

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 40 போலி இணையதளங்கள் செயல்பட்டு போலி தரிசனம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து  திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் தொழில்நுட்பப்பிரிவு அதிகாரி சைபர் க்ரைம் போலீஸிடம் புகார் செய்துள்ளார்.

திருமலை திருப்பதி பெருமாளுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறையேனும் திருப்பதிக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம்.

எனவே சாதாரண நாள்களிலேயே 60,000 பக்தர்கள் திருமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள்.

விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தைத் தொடும்.

தற்போது கோடை விடுமுறை தொடங்க இருப்பதால் பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

எனவே தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியான உடன் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

இலவச மற்றும் ஸ்லாட்டட் தரிசனத்துக்கான வரிசை மிக நீண்டதாக மாறியுள்ளது. குறிப்பாக வார இறுதி நாள்களில் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

TTD Fake Websites

இதைப் பயன்படுத்திக்கொண்டு சிலர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம் தொடங்கி தரிசன டிக்கெட்டுகளை விற்பனை செய்கின்றனர். இணையதளமும் டிக்கெட்டுகளும் போலியானவை என்பதை அறியாமல் பக்தர்கள் அதை வாங்குகிறார்கள்.

தரிசனத்துக்குச் செல்வதற்கு முன்பாக தேவஸ்தான ஊழியர்களின் சோதனையின் போது அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். இதனால் போலி டிக்கெட் எடுத்து பணத்தை இழந்த பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

தரிசன டிக்கெட்டுகள் மட்டுமில்லாது தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவுகள் செய்வதாகவும் இந்த இணையதளங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

சமீபத்தில் இத்தகைய புகார்கள் அதிகரித்து வந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆய்வில் இறங்கி சுமார் 40-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் போலி டிக்கெட்கள் விற்பனை செய்வதைக் கண்டறிந்தது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட்பப்பிரிவு அதிகாரியான சந்தீப் ரெட்டி, சைபர் க்ரைம் போலீஸிடம் புகார் செய்துள்ளார். சைபர் க்ரைம் போலீஸார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு ஓர் அறிக்கை விடுத்துள்ளது.

அதில் தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் மட்டுமே தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன, எனவும் அதன் மூலம் மட்டுமே பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு இதுபோன்று போலியாகச் செயல்பட்ட 19 இணையதளங்களைக் கண்டறிந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் புகார் செய்து முடக்கியது குறிப்பிடத்தக்கது.

கீழ்க்கண்ட போலி இணையதளங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடக்கியுள்ளது.

www.ttdtickets.com, www.ttddarshan.com, tirupatibalajidarshantickets.co.in, tirupatibalajidarshanbooking.com, ttdbalajidarshan.com, myspiritualyatra.com, tirupatibalajidarshan.co.in,
tirupatibalajidarshan.org, www.mybalaji.in, bookingtirupatidarshan.com, www.templeyatri.com, tirupatibalajitemple.com, www.tirupatibalajidarshanbooking.co.in, tirupatitourism.in, tirupatitourismseva.com, padmavathitravels.in, ttddarshan.com, tirupatibalajidarshanbooking.co.in, tirupatidarshanbooking.org.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சாமை மாங்காய் சாதம்

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *