மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய மழை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகள், கடைகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இருப்பினும் பலரது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய கடைகளுக்குள்ளேயே வெள்ளி புகுந்துவிட்டது. இந்நிலையில் சாலையோரம் கடைகள் வைத்திருந்தவர்கள் வெள்ளத்தில் தங்களது பொருட்களை இழந்து என்ன செய்வதென்றே தெரியாமல் வேதனையடைந்துள்ளனர்.
அவர்களுக்கு சில தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வரும் நிலையில், சாலையோரத்தில் வியாபாரம் செய்து வந்த பெண்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இது குறித்து பத்திரிக்கையாளர் ஹேமலதா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“சென்னையில் பெய்த கனமழையால் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வந்த பெண்கள் தங்கள் கடையில் உள்ள பொருட்களை இழந்திருந்தாலோ அல்லது தங்கள் கடையில் உள்ள இயந்திரங்கள் பழுதடைந்திருந்தாலோ, புதிய பொருட்களை இலவசமாக வழங்கவும், இயந்திரங்களை பழுது பார்த்து உதவவும் சென்னை பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை தயாராக இருக்கிறது.
அத்தகைய பெண்கள் உங்கள் பகுதியில் இருந்தால் அவர்களின் விவரங்களை +91 9150304558 என்ற எண்ணிற்கு பகிரவும். 100 பெண்களுக்கு உதவ இவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
களத்தில் உதவிக் கொண்டிருக்கும் தோழர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் அத்தகைய பெண்களுக்கு உதவ விரும்பினால், Divya Swapna Raj அவர்களை 9840886201 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இந்த பதிவை முடிந்தவரை பகிருமாறு என்னுடைய நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
எண்ணூர் எண்ணெய் கழிவு: பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி!
கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா தேதி இதுவா?