தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக டிராட்ஸ்கி மருது நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் எம்.ஜி.ஆர் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் இயங்கி வருகிறது. இங்கு திரைப்படம், இயக்கம், எடிட்டிங் போன்ற திரைக்கலை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் இருந்து வருகிறார். இந்த நிலையில், பயிற்சி நிறுவனத்தில் மேலும் ஒரு தலைவர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டு, ட்ராட்ஸ்கி மருது நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட டிராட்ஸ்கி மருது, ஓவியராக தன் வாழ்வை தொடங்கினார். 1980 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முதல்முறையாக அனிமேஷன், SFX, கம்யூட்டர் கிராஃபிக்ஸ் உருவாக்குவதில் முன்னோடியாக செயல்பட்டார். சினிமாவில் சாதிக்கத்துடிக்கும் இளம் இயக்குனர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு முன்னோடியாக ட்ராட்ஸ்கி மருது இருந்து வருகிறார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…