வித்தியாசமான பெயர்களுடன் விதம் விதமான உணவுகளைச் சுவைப்பதில் நம்மவர்கள் அதிகம் ஆர்வம்காட்டுவார்கள். அந்த வகையில் சத்தான ட்ராபிக்கல் பொங்கலை இந்த ஆண்டு பொங்கலுக்குச் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாமே!
என்ன தேவை?
பச்சரிசி – 2/3 கப்
பால் – 2 கப்
தண்ணீர் – 2 கப்
க்ரீமி தேங்காய்ப்பால் – ஒரு கப்
பைனாப்பிள் துண்டுகள் – கால் கப்
கண்டன்ஸ்டு மில்க் – கால் கப்
சர்க்கரை – அரை கப்
அலங்கரிக்க: வறுத்த தேங்காய்த் துருவல், செர்ரி – சிறிதளவு
எப்படிச் செய்வது?
குக்கரில் பச்சரிசியுடன் பால், தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து ஐந்து விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு நன்கு மசிக்கவும். அதனுடன் தேங்காய்ப்பால், சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க், பைனாப்பிள் துண்டுகள் சேர்த்துச் சூடாக்கி கலவைக் கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.
மேலே தேங்காய்த்துருவல் தூவி, செர்ரி பழங்களைப் பதித்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.
குறிப்பு: ஒரு கப் சூடான பாலில் அரை கப் தேங்காய்த் துருவல் சேர்த்து, கால் மணி நேரம் ஊறவைத்து அரைத்துப் பால் எடுத்தால் ஃக்ரீமி தேங்காய்ப் பால் ரெடி. பைனாப்பிள் துண்டுகள் லேசாகப் புளிப்பு அல்லது கசப்புச் சுவையில் இருந்தால், சிறிது நேரம் சர்க்கரை தண்ணீரில் ஊறவைத்து உபயோகிக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : அதிமுக வட்ட செயலாளர், காவல் ஆய்வாளர் கைது!
ஈரோடு கிழக்குக்கு மட்டும் ரெட்டை பொங்கல் : அப்டேட் குமாரு
மதுரை ஜல்லிக்கட்டு : மல்லுக்கட்ட தயாராகும் காளைகளும், காளையரும் : முழு விவரம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : மீண்டும் களமிறங்குமா காங்கிரஸ்?
நடிகர் விஷால் உடல் நலம் பாதிக்க 5 காரணங்கள்… சினிமா வட்டாரங்கள் சொல்வது என்ன?