மெரினாவில் வயலின் வாசித்த இளைஞர்… தேடி வந்த காவல்துறை!

Published On:

| By christopher

சென்னை மெரினாவில் தனது கல்லூரி படிப்பிற்கான கட்டணம் திரட்டும் நோக்கத்துடன் வயலின் வாசித்த மாணவருக்கு திருவல்லிக்கேணி உதவி ஆணையர் நேரில் சென்று உதவியுள்ளார்.

வேலூரைச் சேர்ந்த மாணவர் அஜித், சென்னை காரப்பாக்கம் கேசிஜி பொறியியல் கல்லூரியில் பிஇ ஏரோஸ்பேஸ் படித்து வருகிறார்.

அரசு பள்ளியில் படித்து, மெக்கானிக்கல் படிப்பில் டிப்ளமோ முடித்துவிட்டு கவுன்சிலிங் மூலமாக நேரடியாக தற்போது பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

அஜித்தின் பெற்றோர்கள் கயிறு திரிக்கும் வேலை செய்து வருகின்றனர். குறைவான வருமானம் பெறும் அவர்களிடம் தனது படிப்பிற்கான செலவை கேட்காமல் தானே சமாளிக்க வேண்டும் என்று அஜித் முடிவு செய்துள்ளார்.

அதற்காக வெளிநாட்டில் உதவி கேட்பது போன்று சென்னை மெரினா கடற்கரையில் “HELP My Higher Education” போர்டுடன் வயலின் வாசித்தபடி தனது கல்லூரி படிப்பிற்கு நிதியுதவி கோரியுள்ளார்.

மாஸ்க் அணிந்தபடி அவர் வயலின் வாசிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து தகவலறிந்த திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கர், மெரினாவில் அஜித்தை நேரில் சந்தித்து விசாரித்துள்ளார்.

மேலும் அவருக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்து உதவியதோடு, சமூக தொண்டு நிறுவனம் மூலமாக மாணவனின் கல்லூரி படிப்பிற்கு நிதி உதவி செய்யவும் ஆணையர் பாஸ்கர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கவிக்கோ மன்றத்தில் அண்ணா, கலைஞர் படம் ஏன் இல்லை?: கொளுத்திப் போட்ட கோவி.லெனின்

கடலின் குரலோடு மோடியின் மனதின் குரல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share