திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் சுவர் இன்று (ஆகஸ்ட் 5) அதிகாலை இடிந்து விழுந்தது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதாகும். இந்த கோவிலில் 21 கோபுரங்கள் உள்ளது.
கடந்த சில மாதங்களாக கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்தின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை சுவர்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் கிழக்கு நுழைவு வாயிலில் கோபுரத்தின் முதல் நிலை சுவர் இடிந்து விழுந்தது. இதில் இருந்த சிற்பங்கள் சிதிலமடைந்துள்ளது. கோவில் சுவர் இடிந்து விழுந்தது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இடிந்து விழுந்த சிதிலங்களை அப்புறப்படுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோபுரம் வழியாக யாரும் செல்ல வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செல்வம்
குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை: பயண விவரம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!