திருச்சியில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் அரசுக்கு சொந்தமான நிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில், குத்தகை காலம் முடிந்ததால் இடத்தை அரசிடம் ஒப்படைக்க கோரி அதிகாரிகள் வந்துள்ளனர்.
திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் இயங்கி வருகிறது. ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தருக்கு சொந்தமான இந்த ஹோட்டல் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலத்திற்கான 33 வருட குத்தகை நேற்றுடன் முடிந்துள்ளது. அதோடு மூன்று ஆண்டுகளாக ரூ.40 கோடி வாடகை பாக்கியும் இருந்துள்ளது.
இந்தநிலையில் எஸ்.ஆர்.எம். ஹோட்டலை காலி செய்யுமாறு சுற்றுலா துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும்,அதற்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் மறுப்புத் தெரிவித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் இன்று (ஜூன் 14) 10க்கும் மேற்பட்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசாருடன் வந்து ஹோட்டலை காலி செய்யுமாறு கூறியிருக்கின்றனர்.
ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்து ஹோட்டல் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 3 மணிக்குள் ஹோட்டல் மூடப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹோட்டல் நிர்வாகத்துக்கு ஆதரவாக ஐஜேகே மற்றும் பாஜக நிர்வாகிகள் கூடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக திமுக கூட்டணியில் இருந்து விலகி என்.டி.ஏ கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
”நீட் மோசடிக்கு முடிவு கட்டுவது எங்கள் பொறுப்பு” – முதல்வர் ஸ்டாலின்