சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் ராக்போர்ட், மங்களூரு விரைவு ரயில்கள் நவம்பர் 1 முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூரிலிருந்து இரவு 11 மணிக்கு மேல் புறப்படும் ரயில்கள் நவம்பர்1, 2, 3 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படுவதாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில்வே நிா்வாகம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.
அதன்படி, எழும்பூரிலிருந்து மங்களூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மங்களூரு விரைவு ரயில் (எண்: 16159), திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும் ராக்போர்ட் அதிவிரைவு ரயில் (எண்: 12653) ஆகியவை மேற்கண்ட நாள்களில் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்