திருச்சியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் சார்ஜா புறப்பட்டது. ஆனால் விமானத்தின் சக்கரம் உள்ளே செல்லாததால் விமானத்தை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
விமானத்தை தரை இறக்க முடியாமல் வானிலேயே இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வட்டமடித்து கொண்டிருந்தது.
புதுக்கோட்டை அன்னவாசல், சுற்றுவட்டாரப் வான் பகுதியில் விமானம் தென்பட்டது. அப்பகுதியில் 20 முறைக்கும் மேல் வட்டமடித்தது.
மறுபக்கம் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் விமான நிலையத்துக்கு வந்தனர். திருச்சி ஆட்சியர் பிரதீப், . திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி ஆகியோரும் விரைந்தனர்.
அதேசமயம் எரிபொருளை தீர்ப்பதற்காக வானிலேயே வட்டமடித்து வந்த நிலையில் விமானம் தற்போது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
திருச்சியில் 2 மணி நேரமாக வானில் வட்டமடிக்கும் விமானம் : 140 பயணிகளின் நிலை?
தாய்லாந்து பிரதமருடன் மோடி ஆலோசனை!