மின்சார வசதி இல்லாமல் இரவு நேரத்தில் இருட்டில் பல ஆண்டுகளாக நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கிராமத்தில் வாழ்ந்த பழங்குடியினருக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ளது ஸ்ரீ மதுரை ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட புத்தூர்வயல் சேமுண்டி கிராமத்தில் அதிகமாக பனியர் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். நாள்தோறும் கூலி வேலைக்கு செல்வது இவர்களின் தொழிலாக உள்ளது. சுற்றியுள்ள கிராமங்களில் பண்டிகை காலங்களிலும், மற்ற நாட்களிலும் மின் விளக்குகள் எரிவதை கண்டு ஏங்காத நாட்களே இல்லை. ஆனால், மின்வாரியத்துக்கு முன்வைப்பு தொகை, மின்சார பொருட்களுக்கான தொகை இல்லாமல் இவர்களுக்கு மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போதுள்ள வார்டு உறுப்பினர் பிந்து மற்றும் ஊராட்சி தலைவர் சுனிலிடம், தங்கள் நிலை குறித்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தன்னார்வலர்களிடையே பழங்குடியினருக்கான மின் இணைப்பு கிடைக்க பெரும் சுமையாக உள்ள முன்வைப்புத் தொகை மற்றும் மின்சார பொருட்கள் வேண்டுமென வார்டு உறுப்பினர் பிந்து தொடர் முயற்சி மேற்கொண்டனர்.
அதன் பலனாக, கூடலூர் ரோட்டரி வேலி மூலமாக பழங்குடியினருக்கு மின்சார வசதி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மூன்று நாட்கள் மின்சார இணைப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதுவரை இரவு நேரங்களில் வெளிச்சத்தை காணாத பழங்குடியினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : குழம்பு வடகம்
ஏலியன் மாதா கி ஜே… அப்டேட் குமாரு
டெண்டர் முறைகேடு : வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு!
செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
சந்திராயன் 4 முதல் உரமானியம் வரை: மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்த திட்டங்கள்!
பெண்களுக்கு ரூ.2000, சிலிண்டர் ரூ.500 : காங்கிரஸ் வாக்குறுதி!