தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று(அக்டோபர் 13) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்(TRB) செயலாளராக தற்போது ராமேஸ்வர முருகன் உள்ளார். இவர் கடந்த 2012-2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
அப்போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாக அவர்மீது புகார் எழுந்தது. இதனையடுத்து சென்னை மற்றும் ஈரோட்டில் ராமேஸ்வர முருகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ராமேஸ்வர முருகன், அவரது மனைவி அகிலா, தந்தை பழனிசாமி, தாய் மங்கையர்க்கரசி, நகைக்கடை உரிமையாளரும், மாமனாருமான அறிவுடைநம்பி, மாமியார் ஆனந்தி உள்ளிட்டவர்களின் பெயர்களில் ஏகப்பட்ட சொத்துக்கள் வாங்கப்பட்டது தெரியவந்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு ராமேஸ்வர முருகனிடம் ரூ.1,98,10,000 மதிப்பிலான சொத்துக்கள் இருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டியில் அந்த சொத்துமதிப்பு ரூ.6,52,52,000 ஆக அதிகரித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதாவது வருமானத்தை விட 354% அதிகமாக ரூபாய் 3.89 கோடி சொத்து சேர்த்ததாக ராமேஸ்வர முருகன் குடும்பத்தினர் 6 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இஸ்ரேலில் இருந்து 21 பேர் தமிழகம் வருகை!
சிவில் நீதிபதி முதன்மைத் தேர்வு: சைதை துரைசாமி மையத்தில் கட்டணமில்லா பயிற்சி!