பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு தேதி இன்று (அக்டோபர் 25) அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு தேதியை அறிவித்துள்ளது.
இதற்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை trb.tn.gov.in என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டும் தான் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாடு அரசு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 2024 ஜனவரி 7 ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்ப தேதி தொடக்கம்: நவம்பர் 1, 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30, 2023
தேர்வு தேதி: ஜனவரி 7, 2024
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்: ஆளுநருக்கு வலியுறுத்திய அமைச்சர்!