Travel by bus metro train in one ticket: CUMTA issues work order

ஒரே டிக்கெட்டில் பஸ், மெட்ரோ, ரயிலில் பயணம் : பணி ஆணை வழங்கியது CUMTA!

தமிழகம்

சென்னையில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்வதற்கான செயலியை உருவாக்க தனியார் நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் இன்று (ஜூலை 9) பணி ஆணை வழங்கியுள்ளது.

சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் என மூன்று பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ளன.

இதற்கெல்லாம் தற்போது மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்கி வருகின்றனர். இந்தநிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தி பயணிக்கும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் என மூன்றிலும் பயணிக்க முடியும். மேலும் இந்த கார்டை ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அதற்கான செயலியை உருவாக்க Moving Tech Innovations Private Limited நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (CUMTA) இன்று பணி ஆணை வழங்கியுள்ளது.

அதன்படி உருவாக்கப்படும் இந்த செயலியை பயன்படுத்தி வரும் டிசம்பரில் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்தபட உள்ளது.

அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களிலும் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

புதிய சாதனை படைத்த விராட்கோலியின் இன்ஸ்டா பதிவு!

வெறும் 185 ரூபாய் கட்டணத்தில் ஒரு வருட படிப்பு… கப்பலில் வேலைவாய்ப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0