transport workers strike warning

பணிக்கு வராத ஊழியர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

தமிழகம்

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத தொழிலாளர் விவரங்களை கணக்கெடுக்க மேலாளர் மற்றும் துணை மேலாளர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இன்று (ஜனவரி 10) இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் பணிமனைகள் முன்பாக போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து கழக தலைமை அலுவலகமான சென்னை பல்லவன் இல்லம் முன்பாக இன்று முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று சிஐடியு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியை போக்குவரத்து கழகம் துவங்கியுள்ளது. அதன்படி, மாவட்டம் மற்றும் கோட்டம் வாரியாக விவரங்களை சேகரிக்க மேலாளர்கள் மற்றும் துணை மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பல பகுதிகளிலும் நேற்று வெளி ஆட்கள் பலரை கொண்டு தமிழக அரசு பேருந்தை இயக்கியது. அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதம் என்று சிஐடியு தலைவர் செளந்தரராஜன் விமர்சித்திருந்தார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த கால அவகாசம் வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆனால் உடனடியாக அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தொழிற்சங்கங்கள் தரப்பில் கோரிக்கை வலுத்து வருகிறது.

பொங்கல் நெருங்கும் வேளையில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாள் ஸ்ட்ரைக்!

ராமர் கோவில் வித்தை காட்டும் பாஜக: மம்தா பானர்ஜி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *