transport workers second day strike

போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாள் ஸ்டிரைக்!

தமிழகம்

காலிப்பணியிடங்கள் நியமனம், பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 10) இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் மட்டும் நேற்று 40 சதவிகித பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று சிஐடியு தலைவர் செளந்தரராஜன் தெரிவித்தார்.

அதேபோல, சென்னையில் 55 சதவிகித போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை என்று அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று இரண்டாவது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் இன்று மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பேருந்து இயக்கத்தை தடை செய்யும் வகையில், முற்றுகையிடவோ பேருந்தை சிறை பிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சென்னை பல்லவன் இல்லம் முன்பு மட்டும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி நிலவரப்படி 9,767 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல பகுதிகளிலும் பணிமனை முன்பாக போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், மதுரையில் பணிமனையை விட்டு வெளியே செல்லும் பேருந்துகளுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் கைதட்டி உற்சாக குரல் எழுப்பி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை எதிர்த்து சென்னையை சேர்ந்த பால் கதியோன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒரு பக்கம் அரசு, மறுபக்கம் வனத்துறை: இரட்டைக் கட்டண வசூலுக்குத் தடை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பொங்கல் கரும்பு: அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்!

சண்முக சுந்தரம் ராஜினாமா: அரசு தலைமை வழக்கறிஞராகிறார் பி.எஸ்.ராமன்

transport workers second day strike

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *