அதிக கட்டணம் வசூலித்ததாக 1,223 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.18.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து துறை இன்று (நவம்பர் 12) தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நவம்பர் 9,10,11 ஆகிய தினங்களில் 10 ஆயிரம் அரசு பேருந்துகளும் 10,975 ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டன.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களா என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தினர். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் பேருந்துநிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.
சென்னையிலிருந்து இதுவரை 4.69 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். ஒரே நாளில் 63 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று அமைச்சர் சிவசங்கர் நேற்று தெரிவித்தார்.
இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களில் 6,699 தனியார் பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அதிக கட்டணம் வசூலித்ததாக 1,223 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.18.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.10 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
INDvsNED: கடைசி போட்டி… புதிய சாதனை படைக்க காத்திருக்கும் மூன்று இந்திய வீரர்கள்!