ரயில்களில் திருநங்கைகள் தொல்லை: தடுத்து நிறுத்த பயணிகள் கோரிக்கை!

தமிழகம்

ரயில் பயணங்களில் பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது திருநங்கைகள். கும்பலாக வரும் சில திருநங்கைகள் கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும், மறுத்தால் அனைவர் முன்பும் அவமானப்படுத்துவார்கள். சில நேரங்களில் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். இதனால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீஞ்சூர் ரயில் நிலையத்தில் திருநங்கையுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு பயணி மரணம் அடைந்தார்.

திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே ஒரு திருநங்கை ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது ரயிலில் சிக்கி கால்கள் துண்டானது.

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி வியாசர்பாடி அருகே பெங்களூரூ விரைவு வண்டி சிக்னலுக்காக நின்றபோது ஒரு பெட்டியில் பயணியிடம் இருந்து திருநங்கைகள் இரண்டு பேர் அவருடைய பாக்கெட்டில் இருந்து 15,000 ரூபாயைப் பறித்து தப்பினர்.

இவ்வாறு ரயில்களில் திருநங்கைகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,

இதுசம்பந்தமாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து இருப்புப் பாதை காவல் துறை கூடுதல் இயக்குநர் வி.வனிதா உத்தரவின்படி,

சென்னை எஸ்பி. வி.பொன்ராமு திருநங்கைகளின் சங்க நிர்வாகிகள் ஜெயா, சுதா, சகிதா ஆகியோரை அழைத்துப் பேசி அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

அப்போது இனிவரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் ஏதும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதை மீறி புகார்கள் வரும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

ராஜ்

ரூ.2000 வாபஸ் – மாநில அரசுடன் ஆலோசித்திருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு

கிச்சன் கீர்த்தனா: நேரம் தவறி சாப்பிடுபவர்களா நீங்கள்?

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *