தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2 ஆண்டு ஆட்சியைப் பூர்த்தி செய்த திமுக அரசு கடந்த சில நாட்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துவருகிறது. அந்தவகையில் இன்றும் சில அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் இன்று (ஜூன் 6) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,
தமிழ்நாட்டில் புதிதாக இயற்கை வளங்களுக்கு என தனியாக துறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்தர் ரெட்டிக்கு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இயற்கை வளங்கள் துறையை கவனிக்க கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுச் சங்கங்களின் முன்னாள் பதிவாளரான ஏ.சண்முக சுந்தரம், போக்குவரத்துத் துறை ஆணையராகவும்,
போக்குவரத்துத் துறை ஆணையராக இருந்த நிர்மல்ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராகவும்,
புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக இருந்த ஜெயகாந்தன், மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை ஆணையராகவும்,
மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை இயக்குநராக இருந்த ரத்னா, மதுவிலக்கு மற்றும் கலால் துறை இயக்குநராகவும்,
ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஆணைய கூடுதல் ஆட்சியராக இருந்த கே.ஜெ.பிரவீன் குமார், மதுரை மாநகராட்சி ஆணையராகவும்,
மதுரை ஆணையராக இருந்த சிம்ரன் ஜீத் சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குநராகவும்,
சேலம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஆணைய கூடுதல் ஆட்சியராக இருந்த எஸ்.பாலச்சந்தர், சேலம் மாநகராட்சி ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரியா
ஆளுநர் மீது வழக்கா? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
தீட்சிதர் குழந்தைத் திருமண வீடியோ- முற்றுப்புள்ளி வைப்பது நல்லது: அமைச்சர் மா.சு.