தொடர் கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று (டிசம்பர் 18) ரத்து செய்யப்பட்டுள்ளன. trains cancelled for south tamilnadu
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தற்போது தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இன்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் தென்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி சாலைகளை சூழ்ந்த மழை நீரால் போக்குவரத்தும் பதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்மாவட்டத்திற்கு ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை – குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி – திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் -செங்கோட்டை விரைவு ரயில் விருதுநகர், ராஜபாளையம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். நெல்லை, தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் திருச்செந்தூர்- பாலக்காடு எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி – ஜம்முநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் இரு மார்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நிஜாமுதீன் – கன்னியாகுமரி விரைவு ரயில் விருதுநகரில் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை – தூத்துக்குடி செல்லும் முத்துநகர் ரயில் கோவில்பட்டியிலும், திருச்செந்தூர் விரைவு ரயில் நெல்லையிலும், தாம்பரம் – நாகர்கோவில் இடையே செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் கொடை ரோடு ரயில் நிலையத்திலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு -நாகர்கோவில் ரயில் மதுரை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. சென்னை – கொல்லம் இடையேயான விரைவு ரயில் விருதுநகரிலும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி வரை இயக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தமிழகமெங்கும் மழை… வறட்சியில் சிவகங்கை… லாரியில் பயிர்களுக்குத் தண்ணீர்!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மருத்துவ துறையில் பணி – இன்றே கடைசி தேதி!
trains cancelled for south tamilnadu